உலகம்

ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை!

Published

on

ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை!

“ஹமாஸ் இயக்கத்தினர் சரியாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிக்கப்படுவார்கள்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்த நிலையில் கடந்த 13ம் திகதி எகிப்​தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்​றும் எகிப்து ஜனாதிபதி அல்சிசி தலை​மை​யில் நடை​பெற்ற காசா அமைதி உச்சி மாநாட்​டில் இந்த அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. எனினும் போர் நிறுத்தம் தொடங்கிய பிறகும் ஹமாஸ் – இஸ்ரேல் படைகளுக்கு இடையே காசாவில் தொடர் மோதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் தொடர்ந்து மீறி வருவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

Advertisement

இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “அவர்கள் சரியாக நடந்துகொள்ள வேண்டும், அவ்வாறு இல்லாவிட்டால் அவர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்கள் இதையே செய்து கொண்டிருந்தால், நாங்கள் உள்ளே சென்று சரி செய்ய வேண்டி இருக்கும். அது  மிகவும் வன்முறையான முறையில் நடக்கும். நான் கூறினால்  இஸ்ரேல் இரண்டு நிமிடங்களில் அங்கே சென்றுவிடுவார்கள்.என்னால் அவர்களிடம், ‘உள்ளே போய் அதைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்ல முடியும். ஆனால் இப்போது, ​​நாங்கள்  அதைச் சொல்லவில்லை தற்போது ஒரு சிறிய வாய்ப்பு கொடுக்கப் போகிறோம்” என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காசா பகு​தியை கட்​டுக்​குள் கொண்​டு​வரு​வது தொடர்​பாக ஆயுதம் ஏந்​திய பாலஸ்​தீனக் குழுக்களுக்கும் ஹமாஸ் குழுக்​களுக்​கும் இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேரை ஹமாஸ் இயக்கத்தினர் சுட்டுக் கொன்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version