சினிமா
2025 ஏகப்பட்ட பிரச்சனை!! பெயரில் மாற்றம் செய்த ஹன்சிகா மோத்வானி..
2025 ஏகப்பட்ட பிரச்சனை!! பெயரில் மாற்றம் செய்த ஹன்சிகா மோத்வானி..
தென்னிந்திய சினிமாவில் டாப் இடத்தில் இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி 2025ல் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம், ஹன்சிகாவின் சகோதரரின் மனைவியும் தொகுப்பாளினியுமான முஸ்கான் நான்சி ஜேம்ஸ், ஹன்சிகா மற்றும் அவரது அம்மா மீது புகாரளித்தார்.தன் கணவர் பிரசாந்த் மோத்வானி, மாமியார் மோனா மோத்வானி, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் தான்னை துன்புறுத்தியதாக கூறி குடும்ப கொடுமை புகாரளித்தார்.இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில், ஹன்சிகா விவாகரத்து செய்யப்போவதாகவும் கணவரை பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் பரவின. விவாகரத்து வதந்திகள் பரவி வரும் நிலையில், ஹன்சிகா தன்னுடைய குடும்ப பெயரை மாற்றியிருக்கிறார்.அவரது தாயின் அறிவுறுத்தலின் பேரி இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறாராம். மோத்வானி என்ற குடும்ப பெயரின் ஸ்பெல்லிங்கில் மாற்றம் செய்துள்ளார்.அதில் ஒரு N கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில், எனது வாழ்க்கையின் புதிய அப்டேட்டை பகிர்ந்து கொள்வதறாக இந்த வீடியோ. 2025 எனக்கு ஒரு சவாலான பயணமாக இருந்ததாகவும் எனது தாயிஜ் விருப்பப்படி எனது குடும்ப பெயரின் ஸ்பெல்லிங்கில் ஒரு மாற்றத்தை செய்துள்ளேன்.இதைத்தான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள நான் விரும்பும் வாழ்க்கையின் புதிய அப்டேட். இதுகுறித்து என் தாயுடன் நிறைய வாக்குவாதங்களூம் விவாதங்களும் செய்து, இறுதியில் அவரது விருப்பத்திற்கு இணங்க நான் முடிவு செய்தேன்.இனிமேல் என்னை Hansika Motwanni என்று பயன்படுத்தலாம், என்னை விமர்சிப்பவர்கள், வதந்திகளை பர்ப்புபவர்கள், எனக்கு நன்மை நினைப்பவர்கள், என்னைப்பற்றி கட்டுரை எழுதுபவர்கள் இந்த ஸ்பெல்லிங்கை சரியாக படுத்துவார்கள் என்று நம்புகிறேன் என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.