சினிமா
Sexy ஆக இருக்க வேண்டிய அவசியமில்லை..! – பிரிவுக்குப் பிறகு உணர்வுகளைப் பகிர்ந்த சமந்தா!
Sexy ஆக இருக்க வேண்டிய அவசியமில்லை..! – பிரிவுக்குப் பிறகு உணர்வுகளைப் பகிர்ந்த சமந்தா!
இந்திய திரைத்துறையில் மிகுந்த முயற்சி, திறமை மற்றும் மனத் தைரியத்துடன் தன்னை நிலைநிறுத்தியவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த இவர், தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சவால்களை எதிர்கொண்டவர்.நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு, சில ஆண்டுகளில் அவர்களது உறவு முடிவுக்கு வந்தது. இது, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால், சமந்தா மீது சமூக ஊடகங்கள் மற்றும் பொது மக்கள் பல்வேறு விமர்சனங்களைக் குவித்தனர். இந்த பிரிவுக்குப் பின்னால் பலவிதமான வதந்திகள் மற்றும் ஊகங்கள் பரவி வந்தன. அந்தநேரம், எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் அமைதியாக இருந்தார் சாம்.ஆனால், தற்போது நடந்த ஒரு பேட்டியில், தனது வாழ்க்கையின் கஷ்டமான கட்டத்தை எடுத்துரைத்துள்ளார். அதன்போது, ” பிரிவிற்குப் பிறகு பல கடுமையான விமர்சனங்களை சந்தித்தேன். ஆனால் வாழ்க்கை ஒரு work in progress, குறைகளை ஏற்றுக் கொள்வதே வளர்ச்சி. கமெரா முன் sexy ஆ இருப்பதை நான் விரும்பவில்லை. கடின உழைப்பும், நேர்மையும் தான் என்னை வடிவமைத்தது.” என்று கூறியுள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.