உலகம்
உகாண்டாவில் கோர விபத்து; 63 பேர் சாவு!
உகாண்டாவில் கோர விபத்து; 63 பேர் சாவு!
உகாண்டாவின் மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் ஒன்றில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 63 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் கம்பாலாவிற்கும் வடக்கு நகரமான குலுவிற்கும் இடையிலான நெடுஞ்சாலையில் நள்ளிரவுக்குப் பின்னர் இந்த விபத்து நிகழ்ந்தது.
எதிர்திசைகளில் இருந்து வந்த இரண்டு பேருந்துகள், ஒரு லொரி மற்றும் பரிதொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன.