தொழில்நுட்பம்

உங்க கையில் ஒரு மினி டாக்டர்.. இனி பழைய ஆப்பிள் வாட்ச்சிலும் உயர் இரத்த அழுத்த எச்சரிக்கை அம்சம்!

Published

on

உங்க கையில் ஒரு மினி டாக்டர்.. இனி பழைய ஆப்பிள் வாட்ச்சிலும் உயர் இரத்த அழுத்த எச்சரிக்கை அம்சம்!

ஸ்மார்ட் வாட்ச் என்றால் வெறும் நேரம் பார்ப்பதற்கோ, நோட்டிஃபிகேஷன் பெறுவதற்கோ மட்டுமில்லை; அது நம் உயிரைக் காக்கும் கருவியாக இருக்க முடியும் என ஆப்பிள் மீண்டும் நிரூபித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது watchOS 26 அப்டேட் மூலம் புரட்சிகரமான உயர் இரத்த அழுத்த அறிவிப்பு (HypertensionNotification) அம்சத்தை வெளியிட்டுள்ளது.இதன் சிறப்பு என்னவென்றால் இந்த அம்சம் லேட்டஸ்ட் மாடல்களுக்கு மட்டுமல்ல, தேர்ந்தெடுக்கப்பட்ட பழைய ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், உங்க ஆப்பிள் வாட்ச் உங்கள் இதயத் துடிப்பை நீண்ட நாட்கள் கண்காணித்து, உங்கள் இரத்த அழுத்தத்தில் ஏதேனும் ஆபத்தான உயர்வு உள்ளதா? என்று பார்த்து, உடனடியாக எச்சரிக்கை செய்து, உங்களை சரியான நேரத்தில் டாக்டரிடம் அனுப்பும்.யாருக்கெல்லாம் வேலை செய்யும்? உங்க வாட்ச் இதில் இருக்கிறதா?இந்த உயிர்காக்கும் அம்சம் வேலை செய்ய உங்கள் கையில் இருக்க வேண்டியவை. வாட்ச் மாடல்கள்: ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, 10, 9 அல்லது ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3, 2 மாடல்கள். போன்: iOS 26 இயங்கும் ஐபோன் 11 அல்லது அதற்குப் பிந்தைய மாடல்.இது மெடிக்கல் டேட்டா என்பதால், சில விதிமுறைகள் உள்ளன. உங்க வாட்ச்சில் ‘Wrist Detection’ இயக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், இந்த அம்சத்தை அமைக்கும்போது, நீங்க 22 வயதுக்கு மேற்பட்டவராகவும், கர்ப்பிணியாக இல்லாமலும், முன் எப்போதாவது உயர் இரத்த அழுத்தம் கண்டறியப்படாதவராகவும் இருக்க வேண்டும் என்று ஆப்பிள் உறுதி கேட்கிறது.தேவைகள் அனைத்தும் சரியாக இருந்தால், உங்க ஐபோனில் உள்ள ஹெல்த் ஆப்-க்கு செல்லுங்கள். அங்கே உங்க Profile ஐகான்-ஐ க்ளிக் செய்து, ‘Health Checklist’-க்குள் நுழையுங்கள். இப்போது ‘Hypertension Notifications’ ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, கேட்கப்படும் தகவல்களை உறுதிசெய்து, ஸ்கிரீனில் வரும் வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும், செட்டிங் முடிந்துவிடும்.இந்த அம்சம் ஸ்மார்ட்டாக செயல்படுகிறது. இன்று ஆக்டிவேட் செய்ததும் நாளை எச்சரிக்கை வராது. உங்க ஆப்பிள் வாட்ச், உங்க இதயத் துடிப்பின் சரியான ‘பேட்டர்ன்’ என்னவென்று அறிந்துகொள்ள, துல்லியமாக 30 நாட்கள் இதயத் தரவுகளைச் சேகரிக்கிறது. இந்த நீண்ட கால டேட்டாக்களை ஆய்வு செய்து, உங்கள் இரத்த அழுத்தப் போக்கில் (Blood Pressure Trends) அசாதாரண உயர்வு தென்பட்டால் மட்டுமே, உங்களுக்கு எச்சரிக்கை நோட்டிஃபிகேஷன் வரும். நீண்ட கால டேட்டா அடிப்படையில், ‘மினி டாக்டர்’ போல செயல்பட்டு, சரியான நேரத்தில் உங்களை எச்சரித்து, உங்கள் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் நம்பகமான அம்சம் இது என்பதில் சந்தேகமில்லை.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version