இலங்கை

என்னை கொன்றால் பேயாக வந்து பழிவாங்குவேன் ; சாமர எம்பியால் நாடாளுமன்றில் சிரிப்பலை

Published

on

என்னை கொன்றால் பேயாக வந்து பழிவாங்குவேன் ; சாமர எம்பியால் நாடாளுமன்றில் சிரிப்பலை

தன்னை கொலை செய்தால் போயாக வந்து பழிவாங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

அதன்போது அவர் மேலும் கூறுகையில், “நீங்கள் எங்களை கொலை செய்யத் தான் முயற்சிக்கிறீர்கள்.நாங்கள் அதற்கு பயமில்லை.கொலை செய்த பின்னர் போயாக வந்து பழிவாங்குவேன்.

 மறைக்கப்பட்ட விடயங்கள்
நீங்களும் பயங்கரவாதிகள் தான் உங்களின் பெரையம் பயங்கரவாத பட்டியலில் தான் சேர்க்க வேண்டும்.மறைக்கப்பட்ட விடயங்கள் எங்களிடம் அதிகம் இருக்கிறது.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்றவர்.

Advertisement

அவரை பாதாள குழுவில் சேர்க்க வேண்டாம். முடிந்தால் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை கைது செய்து எந்த பாதாள குழு செய்தது என்று கூறுங்கள் அப்போது நாம் ஒத்துக் கொள்கிறோம்.  பாதாள குழுவில் அவரின் பெயரை சேர்த்து அவரின் குடும்பத்தை அவஸ்தைகுள்ளாக்க வேண்டாம்.” என்றார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version