இலங்கை
கிருமித்தொற்றால் உயிரிழந்தது சிசு!
கிருமித்தொற்றால் உயிரிழந்தது சிசு!
கிருமித் தொற்றுக் காரணமாக 22 நாள்களேயான சிசுவொன்று உயிரிழந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் பிறந்த இந்த சிசு,காய்ச்சலுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தது. சிகிச்சைகள் வழங்கப்பட்டிருந்த போதும் சிசு உயிரிழந்தது. மூளையில் ஏற்பட்ட கிருமித்தொற்றே இறப்புக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.