இலங்கை
கெஹெல்பத்தரவின் கைப்பேசியில் இருந்தவை தொடர்பில் பியூமியிடம் விசாரணை
கெஹெல்பத்தரவின் கைப்பேசியில் இருந்தவை தொடர்பில் பியூமியிடம் விசாரணை
பிரபல நடிகையான பியூமி ஹன்சமாலியிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (21) சுமார் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
கெஹெல்பத்தர பத்மேவின் கைப்பேசியில் இருந்த புகைப்படம் ஒன்று தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பியூமி ஹன்சமாலி மற்றும் நாட்டின் பல பிரபல நடிகைகளுடன் கெஹெல்பத்தர பத்மேவும் புகைப்படத்தில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பத்மே மற்றும் பியூமி ஹன்சமாலிக்கு இடையேயான பல தொலைபேசி உரையாடல்களும் அவரது கைப்பேசியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறித்த படங்களில் இருக்கும் நடிகைகளிடமும் எதிர்காலத்தில் வாக்குமூலம் பெறப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.