பொழுதுபோக்கு

கோவை கல்லூரி சென்ற பிரதீப் ரங்கநாதன்; செல்ஃபி எடுக்கும்போது தடுப்புகள் சாய்ந்து பரபரப்பு!

Published

on

கோவை கல்லூரி சென்ற பிரதீப் ரங்கநாதன்; செல்ஃபி எடுக்கும்போது தடுப்புகள் சாய்ந்து பரபரப்பு!

இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமீதா, ஆகியோர் நடிப்பில் டியூட் திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. திரைப்பட குழுவினரும் பல்வேறு திரையரங்குகளுக்கும் கல்லூரிகளுக்கும் நேரில் சென்று படத்தை பற்றி கலந்துரையாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை அறிவியல் தனியார் கல்லூரிக்கு படக்குழுவினரான இயக்குனர் கார்த்திஸ்வரன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் வருகை புரிந்து மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.பிரதீர் ரங்கநாதன் திரைப்படத்தில் வரும் பாடலை பாடிய பொழுது மாணவர்கள் அனைவரும் உற்சாகமடைந்தனர். இந்த நிகழ்வின் இறுதியாக நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் இயக்குனர் மேடையில் நின்றவாறு மாணவர்களுடன் செல்பி வீடியோ எடுக்க வந்த பொழுது தடுப்புகளை சுற்றி நின்ற மாணவர்கள் அவர்களது செல்போன்களை பிரதீப் ரங்கநாதனிடம் கொடுக்க முற்பட்ட பொழுது தடுப்புகள் சாய்ந்து கீழே விழுந்தனர். பவுன்சர்கள் தடுத்தும் கீழே விழுந்த நிலையில் உடனே பிரதீப் மற்றும் கீர்த்தீஸ்வரன் பார்த்து நிற்கும்படி கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version