இலங்கை
சீரற்ற வானிலையால் நடந்த விபரீதம்!
சீரற்ற வானிலையால் நடந்த விபரீதம்!
நிகழும் சீரற்ற காலநிலை காரணமாக, பாணந்துறை – கர்மாந்தபுர வீதியில் கார் ஒன்று வழுக்கிச் சென்று கெரபன் கால்வாயில் கவிழ்ந்துள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் காரில் இரண்டு பேர் பயணம் செய்துள்ள போதும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் பிரதேசவாசிகள் கயிறுகளின் உதவியுடன் காரை மீட்டுள்ளனர். முன்னால் ஒரு வாகனம் வந்தபோது காரின் சாரதி பிரேக்கை மிதித்துள்ள நிலையில், மழை காரணமாக வீதி வழுக்கும் தன்மை கொண்டதால், கார் வீதியை விட்டு விலகி கெரபன் கால்வாயில் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, விபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும் அவதானமாக செயற்படுமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.