இலங்கை
சுற்றுலாவிகள் கட்டணம் ‘லைசென்ஸ்’ அதிகரிப்பு
சுற்றுலாவிகள் கட்டணம் ‘லைசென்ஸ்’ அதிகரிப்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணத்தை 2 ஆயிரம் ரூபாவிலிருந்து 15 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த‘லைசென்ஸ்’ வசதி எதிர்காலத்தில் வெளிநாட்டினருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாது என்றும் பல ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பும் இலங்கையர்களும் பொருத்தமான கட்டணங்களைச் செலுத்துவதன் மூலம் அதைப் பெறமுடியும் என்றும் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.