இலங்கை

தனியார் காணியில் அமைக்கப்படும் இராணுவ மருத்துவமனைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

Published

on

தனியார் காணியில் அமைக்கப்படும் இராணுவ மருத்துவமனைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

யாழ்ப்பாணம், வயாவிளானில் உள்ள தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் இராணுவ மருத்துவமனைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி சட்டத் தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

வயாவிளானில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைத்திருக்கும் தனியார் காணியில் சட்டவிரோதமான முறையில் இராணுவ மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. காணி உரிமையாளரின் கோரிக்கையை அடுத்து தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந் திரன், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடமாகாணசபை அவைத் தலைவருமான சி.வீ.கே சிவஞானம் மற்றும் வலி. வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் காணி உரிமையாளருடன் காணி அமைந்துள்ள பகுதிக்கு நேற்று நேரில் சென்று உயர்பாதுகாப்பு வலய எல்லையுடன் நின்று,மருத்துவமனையின் கட்டட வேலைகளை அவதானித்தனர்.

காணி உரிமையாளருடன் கலந்துரையாடிய எம்.ஏ.சுமந்திரன் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் மருத்துவமனைக் கட்டுமானத்துக்கு எதிராக மிக விரைவில் சட்நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version