இலங்கை
நயினாதீவில் குருதிக்கொடை!!
நயினாதீவில் குருதிக்கொடை!!
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு நயினாதீவு மத்திய விளையாட்டுக்கழகம் இரண்டாவது தடவையாக நடத்தும் மாபெரும் குருதிக்கொடை முகாம் நிகழ்வு நாளைமறுதினம் சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நயினாதீவுப் பிரதேச மருத்துவமனையில் இடம்பெறவுள்ளது. இந்தக் குருதிக்கொடை முகாமில் குருதிக்கொடையாளர்கள் பங்கேற்றுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.