இலங்கை
நுரையீரல் தொற்றால் 7 வயதுச்சிறுமி மரணம்
நுரையீரல் தொற்றால் 7 வயதுச்சிறுமி மரணம்
வலிப்பு மற்றும் நுரையீரல் தொற்றுக்காரணமாக 7 வயதுச்சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – குருநகரைச் சேர்ந்த ச.றிகானா (வயது -7) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். நேற்றுமுன் தினம் இரவு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து சிறுமி யாழ்ப்பாணம் போதனா மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆயினும் சிறுமி உயிரிழந்தார். வலிப்பு மற்றும் நுரையீரல் தொற்றுக் காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.