இலங்கை
பாடசாலை மாணவனின் வாழ்வை பறித்த பேருந்து
பாடசாலை மாணவனின் வாழ்வை பறித்த பேருந்து
பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாணந்துறை – ஹொரணை வீதியில் கொத்தலாவல சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று, ஹொரணை நோக்கிச் சென்ற பயணிகள் பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பண்டாரகம, யட்டியானை பகுதியைச் சேர்ந்த 17 வயது, பாடசாலை மாணவன் என்பது தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தின்போது, காயமடைந்த சைக்கிள் ஓட்டுநர் பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.