பொழுதுபோக்கு

பார்வதிக்கு ரூட்டு விடும் திவாகர்… தங்கச்சின்னு சொல்லிட்டு இப்படி பேசாதீங்க; வியானா சொன்ன நச் பதில்

Published

on

பார்வதிக்கு ரூட்டு விடும் திவாகர்… தங்கச்சின்னு சொல்லிட்டு இப்படி பேசாதீங்க; வியானா சொன்ன நச் பதில்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக சமூகவலைதளங்களில் பிரபலமான நபர்கள் அதிகம் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில், வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர், வி.ஜே.பார்வதி, இன்ஸ்டா பிரபலம் பலூன் அக்கா, அகோரி கலையரசன் என பலர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் பங்கேற்றதால் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கடுமையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம், நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பது குறித்து கவனித்தும் வருகின்றனர். அதேபோல் கடந்த 7 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், போட்டியாளர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லவும் அவர்களுக்கு பேசவும் அனுமதி அளிப்பார். ஆனால் விஜய் சேதுபதி அப்படி இல்லை என்ற விமர்சனமும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் பாதியில், விஜய் சேதுபதி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிடுவார் என்று நிகழ்ச்சியில் இருந்து ஒரே நாளில் வெளியேற்றப்பட்ட இயக்குனர் பிரவீன் காந்தி கூறியுள்ளார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பது குறித்து நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பு அதிகமாக உள்ளது. இதையடுத்து, கடந்த வாரம் திருநங்கை அப்சரா சி.ஜே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். தினமும் பல பல திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து மோதல்கள் வெடித்து வருகிறது. முன்னதாக ஜூஸ் மேக்கிங் டாஸ்கில் ஆதிரை தயாரித்த ஜூஸை வி.ஜே.பார்வதியும், திவாகரும் ரிஜக்ட் செய்தனர். இதனால் கடுப்பான ஆதிரை பார்வதி மற்றும் திவாகருடன் சண்டை போட்டார். இது பெரிய பிரச்சனையாகி பார்வதி, திவாகரை பார்த்து உனக்கு அவங்க அதிகமாக சோறு தராங்கல்ல என்று சொன்னதும் கடுப்பான திவாகர், பார்வதியை விளாச ஆரம்பித்தார். இப்படி ஜூஸ் மேக்கிங் டாஸ்க் பல பிரச்சனைகளுடன் நடந்தது.Unmayaaaa nee sothula uppa pottu dhaan thinguriyaaa ??? #Dhadhdhidiwakar#Viyana asked exactly what we all wanted to ask! Thangachinu kooptutu ipdi pesaadhinga 😡😡#BiggBossTamil9#BiggBoss9Tamil#BiggBossTamilpic.twitter.com/mcFqm4g3hyதற்போது, பிக்பாஸ் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், திவாகர், கம்ருதீ, வியானா என அனைவரும் கார்டன் ஏரியாவில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது திவாகர், பேசாம பாருவை திருமணம் செய்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன் என்கிறார்.அதற்கு வியானா, தங்கை என்று சொல்லிவிட்டு திருமணம் செய்யலாமா? அது ஒரு மாதிரி இருக்கும் என்று சொல்கிறார். அடுத்து கம்ருதீன் உங்களை தப்பா பேசுவாங்க அண்ணா என்று சொல்கிறார். இத்துடன் இந்த வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிரும் நெட்டிசன்கள் என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version