இலங்கை

பிரதேச சபைத் தலைவர் படுகொலை : சந்தேகநபர்கள் தொடர்பில் முக்கிய தகவல்கள் கிடைத்தது ; ஆனந்த விஜேபால

Published

on

பிரதேச சபைத் தலைவர் படுகொலை : சந்தேகநபர்கள் தொடர்பில் முக்கிய தகவல்கள் கிடைத்தது ; ஆனந்த விஜேபால

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்த முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்று (23) உரையாற்றும்போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

Advertisement

அதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர நேற்று (22) அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இருந்தபோது இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தநிலையில், இன்று அதிகாலை வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version