இலங்கை
பிரதேச சபைத் தவிசாளர் மரணம் ; எதிர்ப்புத் தெரிவித்து கறுப்பு ஆடை; சிரித்துகொண்டு புகைப்படம்!
பிரதேச சபைத் தவிசாளர் மரணம் ; எதிர்ப்புத் தெரிவித்து கறுப்பு ஆடை; சிரித்துகொண்டு புகைப்படம்!
வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் ‘மிடிகம லாசா’ என்றழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர (வயது 38) படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சியினர் கறுப்பு ஆடையை அணிந்திருந்தனர்.
பாராளுமன்றத்தில் கறுப்பு ஆடையை அணிந்து இன்று (23) எதிர்ப்பு தெரிவித்தனர்.
தனது காரியாலயத்தில் கடமையில் இருந்த போது, இனந்தெரியாத ஒருவர், நேற்று (22) மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் லசந்த விக்ரமசேகர மரணமடைந்தார்.
இந்நிலையில் அவரது மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி கறுப்பு ஆடையை அணிந்து வந்த எதிர்க்கட்சியினர் சிரித்துகொண்டு நாடாளும்ன்றில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.