இலங்கை

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்

Published

on

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்

   தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவாவின் சகோதரும், பிரபல   இசையமைப்பாளருமான  சபேஷ் இன்று (23) காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சபேஷ்,  இன்று  சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள இல்லத்தில்உயிரிழந்தார்.

Advertisement

அவருக்கு வயது 68.

 

தேவாவின்  சகோதரர்களான சபேஷ் மற்றும் முரளி ஆகியோர் சேர்ந்து சபேஷ்-முரளி என்ற இரட்டை இசையமைப்பாளர் குழுவாக பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

Advertisement

மேலும் இவர்கள் தேவாவின் திரைப்படங்களில் இசை உதவி பணிகளையும் செய்துள்ளனர்.

அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமுத்திரம், மாயாண்டி குடும்பத்தார், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் உள்ளிட்ட படங்களுக்கு சபேஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் தனது சகோதரர் தேவா தேசிய விருது பெறாதது குறித்து சபேஷ் வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.     

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version