சினிமா

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா.? துருவின் HARD WORK ஐ பாத்தீங்களா? தீயாய் பரவும் வீடியோ

Published

on

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா.? துருவின் HARD WORK ஐ பாத்தீங்களா? தீயாய் பரவும் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக கொண்டாடப்படும்   விக்ரமின் மகன்தான் துருவ் விக்ரம். இவர் 2019 ஆம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான ஆதித்ய வர்மா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.  தற்போது இவருடைய நடிப்பில் பைசன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த  பைசன் படம்,  சாதி மோதல் மற்றும் சமூக  போராட்டங்களை அடிப்படையாகக் கொண்ட கபடி வீரர் ஒருவரின் வாழ்க்கையை  மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு மக்கள் தங்களுடைய ஆதரவை வழங்கி வருகின்றனர். துருவ் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துள்ளபோதும்  அவையெல்லாம் கணக்கில் இல்லை, இதுதான் என்னுடைய முதல் படம் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஏனென்றால் இந்த படத்திற்காக அவ்வளவு உழைப்பை  காட்டியுள்ளார்.  இதனாலையே இதுதான் எனது முதல் படம் என்று துருவ் தெரிவித்தார். நடிகர் விக்ரம்  சினிமா மீது அதிக ஆர்வம் கொண்டவர். எப்படிப்பட்ட கேரக்டராக இருந்தாலும் அதற்காக தன்னை வாட்டி வருத்தி,  கடின உழைப்பை  வெளிக்காட்டுபவர். இவருடைய நடிப்பில் வெளியான  படங்கள் வணிக ரீதியாக தோல்வியை கொடுத்திருந்தாலும் அதில் விக்ரமின் நடிப்பு மிகுந்த பாராட்டை பெற்றிருக்கும். இந்த நிலையில், துருவ் விக்ரம் பைசன் படத்திற்காக   காட்டிய கடின உழைப்பை  வெளிக்காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள்  அவருடைய தந்தையைப் போலவே படத்திற்காக இவ்வளவு டெடிகேஷன் பண்ணுறாரே என்று துருவ் விக்ரமை புகழ்ந்து பேசி வருகின்றனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version