பொழுதுபோக்கு

பெரிய ஸ்டாரே வந்தாலும் திவாகர் அப்படிதான் இருப்பாரு… நான் பார்வதியிடம் சொன்னது இதுதான்; அப்சரா சி.ஜே ஓபன் டாக்

Published

on

பெரிய ஸ்டாரே வந்தாலும் திவாகர் அப்படிதான் இருப்பாரு… நான் பார்வதியிடம் சொன்னது இதுதான்; அப்சரா சி.ஜே ஓபன் டாக்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தமிழில் விஜய் டி.வி-யில் அக்டோபர் 5-ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியது. 20 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்குகளுடன் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருப்பார்கள். இறுதியில் இந்த டாஸ்குகளை எல்லாம் முடித்து யார் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன் நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக்கும் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை அப்சரா சி.ஜே கலந்து கொண்டார். இவர் ஒரு மாடல் ஆவார். இவர் பல பேஷன் ஷோக்களில் ராம்ப் வாக் செய்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர் மாடலிங்கை தவிர நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.தென்னிந்திய சினிமாவில் தனது ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அப்சராவுக்கு கிடைத்த இந்த பிக்பாஸ் வாய்ப்பானது அவரது திறமையை ரசிகர்களுக்கு எடுத்து செல்ல ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாவது வாரத்திலேயே அப்சரா சி.ஜே எலிமினேட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில், தனியார் சேனலுக்கு பேட்டியளித்த அப்சரா சி.ஜே. கூறியதாவது, “முதல் வாரத்திலேயே எனக்கும் போட்டியாளர்களுக்கும் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனை நானே பேசி தீர்த்துவிட்டேன் அதை நான் சபைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் ரொம்ப பிரபலமானவர். அவர் உள்ளே வந்ததில் எந்த தவறும் இல்லை. அவர் என்ன செய்வார் என்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திவாகரை 80 சதவிகிதம் எனக்கு பிடிக்கும். அவர் செய்யும் செயலை வைத்து 20 சதவிகிதம் பிடிக்காது. பெரிய ஸ்டாரே கொண்டு வந்து நிறுத்தினாலும் நம்ம சமம் தான் என்று திவாகர் பேசுவார். பார்வதி விளையாட்டை ரொம்ப தனிப்பட்ட முறையில் எடுத்து விளையாடுகிறார். நெகட்டிவ்வாகவும் நிறைய செய்கிறார். ஆனால், பார்வதி உண்மையாக இருக்கிறார். பார்வதி பார்வதியாக இருக்கிறார். இதை நான் அவரிடமே சொல்லி உள்ளேன்” என்று கூறினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version