இலங்கை
போதைமாத்திரையோடு யாழில் இருவர் கைது
போதைமாத்திரையோடு யாழில் இருவர் கைது
போதைமாத்திரை விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவரும், போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டிலும் இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதைத் தடுப்புப் பொலிஸ் பிரிவினர் சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 110 போதைமாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும், சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.