இலங்கை

மகனின் சிகிச்சைக்கு சொகுசு காரில் மதுபானம் கடத்திய நபர்

Published

on

மகனின் சிகிச்சைக்கு சொகுசு காரில் மதுபானம் கடத்திய நபர்

  சொகுசு மோட்டார் வாகனம் ஒன்றைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மதுபானம் கடத்திய நபர் ஒருவரை 30 மதுபான போத்தல்களுடன் தொடுவாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வாடகை அடிப்படையில் பெறப்பட்ட சொகுசு வாகனங்களைப் பயன்படுத்தி இந்த வியாபாரத்தை மேற்கொண்டுள்ளதுடன், அதற்காக தனது குடும்ப உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

சந்தேகநபர் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவித்த பொலிஸார் , கைது செய்த சந்தர்ப்பத்தில், தனது மகளின் சத்திரசிகிச்சைக்குத் தேவையான பணத்தைத் திரட்டுவதற்காகவே மதுபானத்தைக் கடத்தியதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மதுபானம் மற்றும் மோட்டார் வாகனத்துடன் மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version