இலங்கை
மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபச்சார விடுதி ; இரு பெண்கள் கைது!
மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபச்சார விடுதி ; இரு பெண்கள் கைது!
கேகாலை – வரக்காப்பொல நகரத்தில் உள்ள 36ஆவது மைல்கல் அருகில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டதாக வரக்காப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வரக்காப்பொல பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் பிலியந்தலை மற்றும் ஹசலக்க ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 42 மற்றும் 36 வயதுடைய பெண்கள் ஆவர். சந்தேக நபர்களான இரண்டு பெண்களும் வரக்காப்பொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.