இலங்கை

மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதி விபத்து: பாடசாலை மாணவன் உயிரிழப்பு

Published

on

மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதி விபத்து: பாடசாலை மாணவன் உயிரிழப்பு

பொலிஸ் பிரிவின் பாணந்துறை – ஹொரணை வீதியில் கொத்தலாவல சந்திக்கு அருகில் உள்ள கிளை வீதியிலிருந்து பிரதான வீதிக்குள் பிரவேசிக்க சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று ஹொரணை நோக்கிச் சென்ற பேருந்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

 விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்தார். 

Advertisement

 உயிரிழந்தவர் பண்டாரகம, யட்டியன பகுதியைச் சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவன் என தெரியவந்துள்ளது.

சடலம் ஹொரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 இதற்கிடையில், நேற்று (22) மாலை பொலன்னறுவை பொலிஸ் பிரிவின் ஹதமுன சந்தி ஹிங்குரக்ககொட வீதியில் 2வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில், மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது.

Advertisement

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர், பின்னால் அமர்ந்து சென்றவர் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளின் செலுத்துனரான பெண்ணும் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் உயிரிழந்தார்.

 இறந்தவர் பொலன்னறுவை, எதுமல்பிட்டியவைச் சேர்ந்த 59 வயதானவர் என தெரியவந்துள்ளது.

சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version