இலங்கை

யாழில் அரசியல்வாதியின் மகன் செய்த மோசமான செயல் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம்

Published

on

யாழில் அரசியல்வாதியின் மகன் செய்த மோசமான செயல் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம்

யாழ்ப்பாணத்தில் 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாளுடன் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடனும், மற்றவர் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தமிழ் தேசியம் சார்ந்த கட்சியின் தீவிர செயற்பாட்டாளர் ஒருவரது மகன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Advertisement

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 25 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் 20 இலட்சம் ரூபாய் பணத்தை புலனாய்வு பிரிவினருக்கு இலஞ்சமாக வழங்க முற்பட்ட போது புலனாய்வு பிரிவினர் அதனை மறுத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version