இலங்கை
யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!
யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இன்றையதினம் மின்சாரம் தாக்கி ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.
நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய புவனேந்திரன் தேவபாலன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவருக்கு பிறப்பிலேயே கை, கால்கள் என்பன செயற்பாடுகள் அற்று காணப்பட்டதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் தனது வாயினால் மின்சார ஆழி குதையினுள் மின் இணைப்புக்கான வயரை செருக முற்படும்போது, அவர் மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.