உலகம்

ரஷ்யா மீது மீண்டும் தடைகளை விதித்த அமெரிக்கா!

Published

on

ரஷ்யா மீது மீண்டும் தடைகளை விதித்த அமெரிக்கா!

ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய்  நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய தடைகளை அறிவித்துள்ளார்.

உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோவிற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்த தடைகள் விதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கமைய ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட்,  லுகோயில் ஆகியவற்றை குறிவைத்து அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது. 

Advertisement

இத்தகைய தடைகளை விதிப்பது அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த உதவும் என்று தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 

இந்த தடை காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 03 சதவீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version