இலங்கை
வங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம்: வடக்கு கிழக்கில் கனமழைக்கு வாய்ப்பு
வங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம்: வடக்கு கிழக்கில் கனமழைக்கு வாய்ப்பு
வங்காள விரிகுடாவில் நாளை 25.10.2025 வெள்ளிக்கிழமை கிழமை அன்று அந்தமான் தீவுகளுக்கு அருகாக மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது.
இந்த தாழமுக்கமும் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள மசிலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக எதிர்வரும் 25.10.2025 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அத்தோடு எதிர்வரும் 25.10.2025 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை