இலங்கை
விபத்தில் சிக்கி பலியான குடும்ப பெண் ; தீவிரமாகும் விசாரணை
விபத்தில் சிக்கி பலியான குடும்ப பெண் ; தீவிரமாகும் விசாரணை
பொலன்னறுவை -ஹடமுனை சந்தி – ஹிங்குரக்ககொடை வீதியில் நேற்று (22) மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர் திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தின்போது பலத்த காயமடைந்த பெண் உள்ளிட்ட மூவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, காயங்களுக்குள்ளான பெண் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் பொலன்னறுவை, அதுமல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில், பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.