பொழுதுபோக்கு

ஹிட் பாடல்களை கொடுத்த தேவாவின் சகோதரர் – இசையமைப்பாளர் சபேஷ் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல்

Published

on

ஹிட் பாடல்களை கொடுத்த தேவாவின் சகோதரர் – இசையமைப்பாளர் சபேஷ் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல்

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேவா. இவர் 90 முதல் தற்போது உள்ள தலைமுறையினர் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக பல பாடல்களுக்கு இசையமைத்து பாடலும் பாடியுள்ளார். இவரை போன்று இசையில் இவரது சகோதரர்களும் கோலோச்சியுள்ளனர். இசையமைப்பாளர்  தேவாவிற்கு சபேஷ், முரளி என்ற இரு சகோதரர்கள் உள்ளனர். அதில், சபேஷ் தனது சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ் – முரளி என்ற பெயரில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர்கள் இருவரும் ஆரம்ப காலக்கட்டத்தில் தேவாவுடன் உதவி இசையமைப்பாளராக பல படங்களில் இணைந்து பணியாற்றினார்கள். அதன்பின்னர், கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் சபேஷும், முரளியும் இணைந்து திரைப் படங்களுக்கு தனியாக இசையமைக்க ஆரம்பித்துவிட்டனர். கடந்த 2001-ல் முதல் முறையாக சபேஷ் – முரளி இசை காம்போவில் சரத்குமாரின் `சமுத்திரம்’ படம் வெளியானது.அவற்றைத் தொடர்ந்து, தவமாய் தவமிருந்து, இம்சை அரசன் 23-ம் புலிகேசி, பொக்கிஷம், மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் என 25 படங்களுக்கு மேல் இருவரும் இசையமைத்திருக்கின்றனர். இவை தவிர ஜோடி, ஆட்டோகிராஃப் உட்பட 20 படங்களுக்கு மேல் பின்னணி இசை அமைத்திருக்கின்றனர். தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் சபேஷ் பணியாற்றியிருக்கிறார். சபேஷ் தேவாவுடன் பணியாற்றிய அனுமபவம் கொண்டவர் மட்டுமல்லாமல் தேவாவின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். ‘கொத்தவால் சாவடி லேடி’, ‘அண்ணாநகர் ஆண்டாளு’ ஆகிய பாடல்களை பாடியது இவர் தான். இந்த பாடல்கள் இன்று வரையிலும் ரசிகர்கள் வைஃப் செய்யும் பாடலாக உள்ளது. இவர்களின் பாடல்கள் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது. 68 வயதாகும் சபேஷ் சிறுநீரகப் பிரச்சனை காரணமாக சமீபத்தில் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,  இன்று திடீரென உடல் நலக்குறைவினால் சபேஷ் காலமானர். இவரது உடல்  சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சபேஷின் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளத்தின் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version