இலங்கை
13 நாள் சிசு கேணியாவால் உயிரிழப்பு
13 நாள் சிசு கேணியாவால் உயிரிழப்பு
13 நாள்களேயான ஆண் சிசு ஒன்று கேணியா காரணமாக உயிரிழந்துள்ளது. பருத்தித்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிசு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு சிசு உயிரிழந்துள்ளது.
இறப்பு விசாரணைகளைத் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.