வணிகம்
2 நாட்களில் ₹4,000க்கு மேல் சரிவு! தங்கம் விலை இன்று நிலவரம் என்ன? வாங்க இதைவிட நல்ல வாய்ப்பு இல்லை!
2 நாட்களில் ₹4,000க்கு மேல் சரிவு! தங்கம் விலை இன்று நிலவரம் என்ன? வாங்க இதைவிட நல்ல வாய்ப்பு இல்லை!
சென்னை:அமெரிக்காவில் எச்-1பி விசா கட்டண உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு போன்ற உலகளாவிய பொருளாதாரச் சலசலப்புகளால், சமீப காலமாக முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது விழுந்தது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.இந்தச் சூழலில், கடந்த இரண்டு நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.நேற்று (அக். 22) ஒரே நாளில் ஏற்பட்ட பெரும் சரிவு:நேற்று (அக்டோபர் 22) காலையில், 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 300 குறைந்து, ஒரு கிராம் ரூ. 11,700க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ. 2,400 குறைந்து, ரூ. 93,600க்கு விற்பனையானது.நேற்று மாலை, இரண்டாவது முறையாக மேலும் விலை குறைந்தது. ஒரு கிராம் ரூ. 160 குறைந்து ரூ. 11,540க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ. 1,280 குறைந்து ரூ. 92,320க்கு விற்பனையானது.இதன் மூலம், நேற்று ஒரே நாளில் ஒரு பவுனுக்கு மொத்தமாக ரூ. 3,680 குறைந்து விற்பனையானது.வெள்ளி விலையும் நேற்று ஒரு கிராமுக்கு மொத்தம் ரூ. 7 குறைந்து, ஒரு கிராம் ரூ. 175க்கும், ஒரு கிலோ ரூ. 1,75,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.இன்றும் தொடரும் விலை குறைவு (அக். 23):தொடர்ந்து இன்றும் (அக்டோபர் 23, வியாழக்கிழமை) தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது.22 கேரட் தங்கம்: கிராமுக்கு ரூ. 40 குறைந்து, ஒரு கிராம் ரூ. 11,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ. 320 குறைந்து, ஒரு சவரன் ரூ. 92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.18 கேரட் தங்கம்: கிராமுக்கு ரூ. 50 குறைந்து, ஒரு கிராம் ரூ. 9,650க்கும், ஒரு சவரன் ரூ. 77,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை: கிராமுக்கு ரூ. 1 குறைந்து, ஒரு கிராம் ரூ. 174க்கும், ஒரு கிலோ ரூ. 1,74,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 4,000க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது, இதனால் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.