இலங்கை
9 கிலோ குஷ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது
9 கிலோ குஷ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது
கொழும்பு குற்றப்பிரிவுப் பொலிஸார் நடத்திய சோதனையில், 9 கிலோ 555 கிராம் குஷ்போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 வயது இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் உள்ள சிறிமுத்து உயன வீட்டுவசதி வளாகத்துக்கு அருகில் நேற்றுமுன்தினம் பிற்பகல் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச்சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்