சினிமா

Natchu கூப்பிடுறான் வந்துடுங்க அப்பா..! கண்கலங்கிய இந்திரஜா

Published

on

Natchu கூப்பிடுறான் வந்துடுங்க அப்பா..! கண்கலங்கிய இந்திரஜா

தமிழ் சினிமாவில்  சிறந்த நகைச்சுவை நடிகராக  அனைவரையும் சிரிக்க வைத்தவர் ரோபோ சங்கர்.  இவர் மேடை சிரிப்புரைஞர், நகைச்சுவை நடிகர், தொகுப்பாளர் எனப் பல துறைகளிலும் தனக்கான முத்திரையை பதித்தார். இவரின் திடீர் மறைவு  திரை உலகை மட்டும் இல்லாமல் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ரோபோ சங்கருக்கு ஏற்கனவே மஞ்சள் காமாலை நோய் இருந்தது. ஆனால் அதிலிருந்து  மீண்டவர்,  மீண்டும் படப்பிடிப்புகளில்   ஈடுபட்டு வந்தார்.  இதன் போதே புதிய படத்தின் சூட்டிங் ஒன்றில் திடீரென மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரோபோ ஷங்கரின் இறுதி ஊர்வலத்தின் போது அவருடைய மனைவி  நடனம் ஆடியது பல சர்ச்சை விவாதங்களை ஏற்படுத்தியது. ஆனாலும்  அது அவர்களுடைய காதலின் வெளிப்பாடு, வேதனையின் வெளிப்பாடு என்பதையும் உணர்வுபூர்வமாக அவருடைய மகள்  இந்திரஜா எடுத்துரைத்தார். தன்னுடைய தனி உழைப்பால் மட்டுமே  உயர்ந்த ரோபோ சங்கர் உடைய மறைவு அவருடைய குடும்பத்தினரை பெரிதளவில்   பாதித்தது. எனினும் தற்போது திரைப் பிரபலங்கள் பலரும் அவர்களுடைய குடும்பத்திற்கு பக்க பலமாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில், ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா  அவருடைய மகன் தாத்தா தாத்தா என வீடு முழுக்க தேடி அலைவதாக உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது பார்ப்போரின் மனங்களை உருகச் செய்துள்ளது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version