பொழுதுபோக்கு

OTT Release: பரபரப்பான கிரைம் த்ரில்லர்… இடையில் காமெடியை சிதறவிடும் யோகி பாபு: இந்த ஓ.டி.டி-யில் பாருங்க!

Published

on

OTT Release: பரபரப்பான கிரைம் த்ரில்லர்… இடையில் காமெடியை சிதறவிடும் யோகி பாபு: இந்த ஓ.டி.டி-யில் பாருங்க!

இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவான திரைப்படம்  ‘அக்யூஸ்ட்’ . இந்த படத்தில்  உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார். ஆக்ஷன்-ஃபேமிலி எண்டர்டெயினராக தயாரான இப்படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ் – சச்சின் சினிமாஸ்-  ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது.இப்படம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கொலை குற்றவாளியான உதயாவை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக, சென்னை புழல் சிறையில் இருந்து பாதுகாப்பாக அழைத்து செல்கிறார் போலீஸ் அஜ்மல். ஒருகட்டத்தில் பாதுகாப்பு சூழல் காரணமாக, அரசு பஸ்சில் செல்லவேண்டிய சூழல் ஏற்படுகிறது. அப்போது உதயாவை கொலை செய்ய வெளிமாநில ரவுடி கும்பல் துரத்தி வருகிறது. இதற்கு போலீசாரும் உடந்தையாக இருக்கிறார்கள். கொலை கும்பலிடம் உதயா தப்பித்தாரா? அவரை துரத்தும் கும்பல் யார்? இதன் பின்னணி தான் என்ன? என்பதே இப்படத்தின் கதைக்களம்.காதல், சோகம் என பல பரிணாமங்களில் உதயா பளிச்சிடுகிறார். இவரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருந்தது. யோகிபாபு காமெடி செமையாக ஒர்க் அவுட் ஆகியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், படத்தின் ஐடியா சுவாஸ்யமானது என்றாலும் காட்சிகளிலும், கதை சொன்ன விதத்திலும் தனித்துவமாக குறிப்பிட்டு சொல்வதற்கு எதுவும் இல்லை என்பதே படத்தின் மைனஸ் என்றும் விமர்சனம் வெளியானது.இப்படி பல கருத்துக்களை கொண்ட  ‘அக்யூஸ்ட்’  திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் அக்டோபர் 24-ஆம் தேதி ஆஹா தமிழ் தளத்தில் வெளியாகிறது. திரையரங்குகளில் இத்திரைப்படத்தை பார்க்க தவறிய ரசிகர்கள் ஓ.டி.டி-யில் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தை காண ஆவலுடன் இருக்கிறார்கள்.பிரபு ஸ்ரீநிவாஸ்பிரபல நடன இயக்குநரான பிரபு ஸ்ரீநிவாஸ் சுந்தர்.சி, தனுஷ், அர்ஜுன் ஆகியோர் நடித்த படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவர் கிட்டத்தட்ட 400 படங்களுக்கு மேல் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். கன்னடத்தில் திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் அங்கு சென்று படத்தை இயக்கினார். தொடர்ந்து, ஆறு படங்கள் கன்னடத்தில் இயக்கி ஆக்‌ஷன் இயக்குநர் என்ற பெயரை பெற்றுள்ளார். தற்போது ஏழாவதாக தமிழில் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தை இயக்கினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version