இலங்கை

ஆசிரியர் இடமாற்றத்துக்கு இடைக்காலத் தடையுத்தரவு!!

Published

on

ஆசிரியர் இடமாற்றத்துக்கு இடைக்காலத் தடையுத்தரவு!!

கிளிநொச்சி வடக்கு வலயத்துக்கு வழங்கப்பட்ட ஆசிரிய இடமாற்றத்துக்கு நீதிமன்றால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாலய ஆசிரியரொருவருக்கு வடமாகாண கல்வித் திணைக்களத்தால் கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்துக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.

இந்த இடமாற்ற கட்டளைக்கு, இடைக்கால தடைவிதிக்குமாறுகோரியும், குறித்த இடமாற்றல் கடிதத்தை இரத்துச் செய்யுமாறுகோரியும் கிளிநொச்சி மேல்நீதிமன்றில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனால் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் முன்வைத்த சமர்ப்பணங்களின் அடிப்படையில், குறித்த ஆசிரியருக்கு வடமாகாணக் கல்வித் திணைக்களத்தால் கிளிநொச்சி வடக்கு வலயத்துக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இடைநிறுத்தும் இடைக்காலத் தடையுத்தரவு நீதிபதி ரி.அலெக்ஸ் ராஜாவால் பிறப்பிக்கப்பட்டது. அடுத்த வழக்கு விசாரணை நவம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version