இலங்கை

இஷாரா செவ்வந்தி தப்பிப்பதற்கு உதவிய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

Published

on

இஷாரா செவ்வந்தி தப்பிப்பதற்கு உதவிய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்வதற்கு உதவியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் பிரதிவாதி சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Advertisement

இதேவேளை, கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மற்ற சந்தேகநபர்களையும் குறித்த திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பூசா சிறைச்சாலையில் உள்ள துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் மற்ற சந்தேகநபர்கள் ஜூம் தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version