இலங்கை

எதிர்கட்சி எம்.பியை கொலை செய்ய திட்டம்; நாடாளுமன்றில் வெளியான தகவல்

Published

on

எதிர்கட்சி எம்.பியை கொலை செய்ய திட்டம்; நாடாளுமன்றில் வெளியான தகவல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது கட்சியின் உறுப்பினரான ஜகத் வித்தானகேவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

Advertisement

இதன் பின்னர் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் வித்தான தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 பொலிஸ் மா அதிபரிடமிருந்து களுத்துறை பகுதி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டிருக்கும் இரகசிய தகவலின் படி , வீட்டிலிருந்து வாகனத்தில் செல்லும் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொலையாளி தொடர்பான பெயர் விபரங்கள் தெரிவித்து அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு களுத்துறை பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த இரகசிய கடிதம் எனக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இதன்படி  தனது பாதுகாப்பை வலுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் வித்தான கேட்டுக் கொண்டதுடன், அந்த கடித்தத்தை நாடாளுமன்றத்தில்  கையளித்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version