சினிமா

என்ர Background உங்களுக்குத் தெரியாது.! கம்ருதீனால் பொங்கியெழுந்த திவாகர்.!

Published

on

என்ர Background உங்களுக்குத் தெரியாது.! கம்ருதீனால் பொங்கியெழுந்த திவாகர்.!

தற்பொழுது ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அங்கு நடைபெறும் சண்டைகள் இணையதளங்களில் தற்பொழுது வைரலாகி வருகின்றன. சமீபத்தில், திவாகர் மற்றும் கம்ருதீன் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிக்பாஸ் வீட்டில், போட்டியாளர்கள் தங்களது மனக்குழப்பங்களை நேரடியாக வெளிப்படுத்துவது அதிகமாக கவனிக்கப்பட்டுள்ளது. இதில் திவாகர் மற்றும் கம்ருதீன் இடையே ஏற்பட்ட மோதல்,ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.நிகழ்ச்சியின் சமீபத்திய காட்சி ஒன்றில், திவாகர் தனது கோபத்தை வெளிப்படுத்திய போது, “நான் கோபத்தைக் காட்டினால் தாங்காது. கம்ருதீன் எல்லாம் எனக்கு ஒரு ஆளே கிடையாது. என் background என்னவென்று உங்களுக்குத் தெரியாது…” என்று கூறியுள்ளார். இதற்கு கம்ருதீன், “உங்க interview-ல பார்த்திருக்கேன்…” என்று பதிலடி கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கம்ருதீன் மற்றும் திவாகர் குறித்த விமர்சனங்கள் மற்றும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version