தொழில்நுட்பம்
எரிச்சலூட்டும் விளம்பரங்களுக்கு குட்பை… பிரவுசிங் அனுபவத்தை மேம்படுத்தும் எக்ஸ்டென்ஷன்கள்!
எரிச்சலூட்டும் விளம்பரங்களுக்கு குட்பை… பிரவுசிங் அனுபவத்தை மேம்படுத்தும் எக்ஸ்டென்ஷன்கள்!
இணையத்தில் ப்ரௌசிங் செய்யும்போது எரிச்சலூட்டும் பாப்-அப் விளம்பரங்கள், பேனர்கள் மற்றும் மெதுவாக லோட் ஆகும் வலைப் பக்கங்களால் (Web Pages) நீங்க சோர்வடைந்துள்ளீர்களா? இந்தப் பிரச்சனைக்கு எளிய தீர்வுதான் லைட்வெயிட் பிரவுசர் எக்ஸ்டென்ஷன்கள் (Browser Extensions). விளம்பரங்கள் மற்றும் டிராக்கர்களைத் தடுக்கும் இந்த சாப்ட்வேர் தொகுப்புகள், உங்க பிரவுசிங் அனுபவத்தை மேம்படுத்துவதுடன், இணைய பக்கங்களை வேகமாக லோட் செய்ய உதவுகின்றன. மேலும், தேர்ட்-பார்ட்டி தரவு சேகரிப்பாளர்களிடமிருந்து உங்க டேட்டாவை பாதுகாக்கவும் இது மிகவும் உதவுகிறது.பிரவுசர் எக்ஸ்டென்ஷன்கள் என்றால் என்ன?பிரவுசர் எக்ஸ்டென்ஷன்கள், சில சமயங்களில் ப்ளக்-இன்கள் (Plug-ins) அல்லது ஆட்-ஆன்கள் (Add-ons) என்றும் குறிப்பிடப்படுகின்றன. இவை கூகுள் குரோம், ஃபயர்ஃபாக்ஸ், எட்ஜ் மற்றும் சஃபாரி போன்ற வெப் பிரவுசர்களின் செயல்பாட்டைத் தனிப்பயனாக்கி மேம்படுத்தும் சிறிய சாஃப்ட்வேர் மாட்யூல்கள் ஆகும். கூகுள் குரோம் போன்ற பிரவுசர்கள், தங்கள் சொந்த வெப் ஸ்டோர்களைக் கொண்டுள்ளன. அங்கிருந்து பயனர்கள் இந்த எக்ஸ்டென்ஷன்களை நேரடியாக டவுன்லோட் செய்யலாம்.எக்ஸ்டென்ஷன்களின் முக்கியப் பணிகள்:பாப்-அப் விளம்பரங்கள் மற்றும் டைனமிக் கன்டென்ட்களை பிளாக் மற்றும் ஃபில்டர் செய்வது. பாஸ்வேர்ட்களைச் சேமித்து பாதுகாப்பது. குறிப்பிட்ட இணையதளங்கள் அல்லது ஆப்களில் செலவிடும் நேரத்தைக் கண்காணிப்பது அல்லது கட்டுப்படுத்துவது. எழுத்துப்பிழை, இலக்கணம் மற்றும் பிற எழுத்துப் பிழைகளைச் செக் செய்து சரிசெய்வது. உதவி அம்சங்களுடன் அணுகல் தன்மை மற்றும் கண்டெண்ட் மேம்படுத்துவது.எக்ஸ்டென்ஷனை டவுன்லோட் செய்வது எப்படி?ஆட் பிளாக்கர் (Ad Blocker) இன்ஸ்டால் செய்ய, பின்வரும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம். உங்க பிரவுசரை (குரோம், எட்ஜ் அல்லது ஃபயர்ஃபாக்ஸ்) ஓபன் செய்து, அதன் எக்ஸ்டென்ஷன் ஸ்டோருக்குச் செல்லவும். சர்ச் பாக்ஸில் “uBlock Origin Lite” அல்லது “AdBlock Plus” போன்ற நம்பகமான ஆப்ஷன்களை டைப் செய்து தேடவும். இவை குறைவான சிஸ்டம் மெமரியைப் பயன்படுத்தி திறமையாகச் செயல்படும் பிரபலமான டூல்கள். எக்ஸ்டென்ஷனைக் கண்டறிந்ததும், ‘Add to Browser’ என்பதை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்யவும். இன்ஸ்டால் செய்த உடன், அது செயலில் இருப்பதைக் குறிக்கும் சிறிய ஐகான் உங்கள் டூல்பாரில் தோன்றும்.