இலங்கை
கரவெட்டியில் இடம்பெற்ற பனம் விதைகள் நடுகை வேலைத்திட்டம்!
கரவெட்டியில் இடம்பெற்ற பனம் விதைகள் நடுகை வேலைத்திட்டம்!
இன்றையதினம் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில், புளூஸ் அறக்கட்டளை மற்றும் புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் நிதி அனுசரணையுடன், கரவெட்டி கிழக்கு ஜே/368 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட இடங்களில் பன விதைகள் நாட்டும் நிகழ்வானது ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தலைமையில் ஆரம்பமானது.
இவ் நிகழ்வானது 30,000 பன மரங்களை உருவாக்கும் நோக்குடன், அண்மையில் அமரத்துவம் அடைந்த சமூகசேவையாளர் கணபதிப்பிள்ளை கந்தையா ஞாபகார்த்தமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பனம் விதை நடுகை நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன், பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெகோபி, பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அ.அகஸ்ரின், வடமராட்சி தெற்கு – மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜெ.கலைச்செல்வி, ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.