இலங்கை
குடும்பநல உத்தியோகத்தர்கள் சேவையில் 2613 வெற்றிடங்கள்
குடும்பநல உத்தியோகத்தர்கள் சேவையில் 2613 வெற்றிடங்கள்
குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் 2613 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அடுத்தாண்டு மார்ச் மாதமளவில் ஆயிரத்து 110 பேருக்கு குடும்ப நல உத்தியோகத்தர் பதவிக்கான நியமனங்கள் வழங்கப்படும் எனச் சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்குத் தீர்வுகாண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குடும்ப சுகாதார உத்தியோகத்தர் பயிற்சிக் கல்லூரிகளில் ஆயிரத்து 110 குடும்பநல உத்தியோகத்தர்கள் பயிற்சி பெறுவதுடன், இவர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தமது பயிற்சிக் காலத்தை நிறைவு செய்யவுள்ளார்கள். பயிற்சியை நிறைவுசெய்தவுடன் இவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.