இலங்கை
குருதி வாந்தியெடுத்து குடும்பத்தலைவர் பலி!
குருதி வாந்தியெடுத்து குடும்பத்தலைவர் பலி!
குருதிவாந்தி எடுத்த குடும்பத்தலைவர் ஒருவர் மேலதிக சிகிச்சையின்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். காரைநகர் வலந்தலை பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது-47) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
நேற்றுக்காலை 6.30மணியளவில் அவர் குருதிவாந்தி எடுத்துள்ளார். சில நிமிடத்தில் மூக்கு வழியாகவும் குருதி வெளியேறியுள்ளது. இதையடுத்து, வலந்தலை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேலதிக சிகிச்சையின்போது அவர் உயிரிழந்தார்.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.