இலங்கை
கொழும்பு தேசிய மருத்துவமனையில் பரபரப்பு; உந்துருளியில் ஆயுதங்கள்
கொழும்பு தேசிய மருத்துவமனையில் பரபரப்பு; உந்துருளியில் ஆயுதங்கள்
கொழும்பு தேசிய மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளியில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ஆயுதங்கள் மருத்துவமனையின் ஊழியர் ஒருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது.
108 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவமனையின் வாகனத் தரிப்பிடத்தை துறைசார் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போதே, குறித்த உந்துருளியில் இருந்து, 5 – T56 ரக துப்பாக்கி ரவைகள் மற்றும் 9 மில்லிமீற்றர் தோட்டாக்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் வெளி நபர்களால் கடத்தப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதா? அல்லது அவை மருத்துவமனையின் ஊழியருக்குச் சம்பந்தப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.