பொழுதுபோக்கு

சிவாஜிக்காக ஆங்கிலத்தில் பாடிய டி.எம்.எஸ்; பாட்டு பெரிய ஹிட்டு, படம் ஹிட்டானதா?

Published

on

சிவாஜிக்காக ஆங்கிலத்தில் பாடிய டி.எம்.எஸ்; பாட்டு பெரிய ஹிட்டு, படம் ஹிட்டானதா?

தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆர் என முன்னணி நடிகர்கள் பலரின் குரலாக இருந்த பாடகர் டி.எம்.சௌந்திரராஜன், சிவாஜிக்காக ஒரு பாடலை ஆங்கிலத்தில் பாடியுள்ளார். அந்த படமும், அந்த பாடலும் பெரிய ஹிட்டாக அமைந்தது பலரும் அறியாத ஒரு தகவல்.1972-ம் ஆண்டு பி.மாதவன் இயக்கத்தில் வெளியான படம் ஞான ஒலி. சிவாஜி, விஜய நிர்மலா, சாரதா, ஸ்ரீகாந்த், மேஜர் சுந்தர்ராஜன், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு வியட்நாம் வீடு சுந்தரம் கதை திரைக்கதை எழுதயிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கண்ணதாசன் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார்.ஆண்டனி என்ற சிலுவை செய்யும் தொழிலாளியாக இருக்கும் சிவாஜி மீது குற்ற செயல்கள் இருக்கும் என்பதால், அவரின் நெருங்கிய நண்பரான ஐபிஎஸ் அதிகாரி மேஜர் சுந்தர்ராஜன், அவரை கைது செய்ய வேண்டும் என்று முயற்சி செய்வார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவரின் முயற்சி வீணாகிவிடும் நிலையில், சில வருடங்கள் வெளியூர் சென்ற மேஜர் சுந்தர் ராஜன் மீண்டும் ஊர் திரும்பும்போது சிவாஜி வேறு மாதிரி இருப்பார்.அருண் என்ற பெயரில் பொதுமக்களுக்கு நன்மை செய்யும் ஒரு பெரும் பணக்காரனாக இருக்கும் சிவாஜியை பார்க்கும் மேஜர் சுந்தர் ராஜன் இது நமது நண்பன் தான் ஆனால் எப்படி கைது செய்வது என்று யோசிப்பார். இதனிடையே தனது நண்பன் தன்னை கைது செய்ய நினைக்கிறானே என்று வருத்தப்படுவதா? அல்லது நல்ல நிலையில் இருந்து இந்த மக்களுக்கு பல உதவிகள் செய்ததை நினைத்து சந்தோஷப்படுவதா? என்று மனதிற்குள் நினைத்துக்கொள்வார் சிவாஜி.அந்த நேரத்தில் சிவாஜியின் மனதில் இருந்து பாடும்பாடியான ஒரு பாடல் தான் ‘’தேவனே என்னை பாருங்கள்’’ என்ற பாடல். டி.எம்.சௌந்திரராஜன் பாடிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், இன்றும் ஒரு பேசப்படக்கூடிய ஒரு பாடலாக இருக்கிறது. குறிப்பாக இந்த பாடலுக்கு இடையில் வரும் வசனங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ‘’ஒரு மந்தையில் இருந்த 2 ஆடுகள் வேறு வேறு பாதையில் சென்றுவிட்டன. மீண்டும் சந்திக்கும்போது பேச முடியவில்லையே’’ என்ற வசனம் இன்னும் பல மீம்ஸ் மற்றும் காமெடிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த பாடலை பாட டி.எம்.சௌந்திரராஜன் வரவழைக்கப்பட்டபோது, பாடலுக்கு இடையில் வரும் வசனங்களை சிவாஜியை வைத்து பதிவு செய்யலாம் என்று படக்குழுவினர் சொல்ல, சிவாஜி தன்னால் முடியாது என்று கூறியுள்ளார். அதன்பிறகு ஒரு மெமிக்ரி கலைஞரை அழைத்து வந்து சிவாஜி போலவே பேச வைத்துள்ளனர். ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்துள்ளது. அதன்பிறகு டி.எம்.எஸ் -ஐ பேசுமாறு எம்.எஸ்.வி சொல்ல, அவரும் சரி என்று அந்த ஆங்கில வார்த்தையில் பாடியுள்ளார்.டி.எம்.எஸ். குரலில் வந்த இந்த வசனமும் இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாடலை பாடி முடித்தவுடன், டி.எம்.எஸ்-ஐ கட்டிபிடித்த சிவாஜி கணேசன், சூப்பர் டி.எம்.எஸ் என்று பாராட்டியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version