இலங்கை

தங்க விலை குறைவில் தாக்கம் செலுத்தும் டொலரின் பெறுமதி

Published

on

தங்க விலை குறைவில் தாக்கம் செலுத்தும் டொலரின் பெறுமதி

இன்று (23) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,

Advertisement

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 80 சதம், விற்பனை பெறுமதி 307 ரூபாய் 14 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 398 ரூபாய் 43 சதம், விற்பனை பெறுமதி 410 ரூபாய் 97 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 346 ரூபாய் 13 சதம்,

Advertisement

விற்பனை பெறுமதி 357 ரூபாய் 59 சதம்.

சர்வதேச நாணயச் சந்தையில் டொலரின் பெறுமதியில் ஏற்படும் மாற்றங்கள், தங்கத்தின் விலையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறன.

இலங்கையைப் பொறுத்தவரை, உலகச் சந்தை விலை மற்றும் உள்ளூர் டொலர் மாற்று வீதம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

Advertisement

இந்தநிலையில், அகில இலங்கை தங்க ஆபரண விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரத்தினராஜா சரவணன் அவர்கள், “உலக சந்தையில் நிலவும் தங்க விலைக்கு ஏற்ப, பாரிய வேறுபாடின்றி இலங்கையிலும் தங்க விலை நிர்ணயிக்கப்படும்.

அத்துடன், எதிர்காலத்தில் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கி இன்று (23) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version