பொழுதுபோக்கு
திவாகரை அடிக்க பாய்ந்த கம்ருதீன்… கையெடுத்து கும்பிட்ட வினோத்; போர்க்களமான பிக்பாஸ் வீடு
திவாகரை அடிக்க பாய்ந்த கம்ருதீன்… கையெடுத்து கும்பிட்ட வினோத்; போர்க்களமான பிக்பாஸ் வீடு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக சமூகவலைதளங்களில் பிரபலமான நபர்கள் அதிகம் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில், வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர், வி.ஜே.பார்வதி, இன்ஸ்டா பிரபலம் பலூன் அக்கா, அகோரி கலையரசன் என பலர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் பங்கேற்றதால் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கடுமையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம், நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பது குறித்து கவனித்தும் வருகின்றனர். அதேபோல் கடந்த 7 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், போட்டியாளர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லவும் அவர்களுக்கு பேசவும் அனுமதி அளிப்பார். ஆனால் விஜய் சேதுபதி அப்படி இல்லை என்ற விமர்சனமும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் பாதியில், விஜய் சேதுபதி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிடுவார் என்று நிகழ்ச்சியில் இருந்து ஒரே நாளில் வெளியேற்றப்பட்ட இயக்குனர் பிரவீன் காந்தி கூறியுள்ளார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பது குறித்து நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பு அதிகமாக உள்ளது. இதையடுத்து, கடந்த வாரம் அப்சரா சி.ஜே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். தினமும் பல பல திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து மோதல்கள் வெடித்து வருகிறது. இந்நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “பாரு, திவாகர், கம்ருதீன், வினோத் ஆகியோர் கார்டன் ஏரியாவில் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்போது பாரு திவாகரை பார்த்து நீ ரிவ்யூ பண்றது எல்லாம் தான் சரி என்று கத்துகிறார். இதனால் கோபமடைந்த திவாகர் அப்ப நீ ரிவ்யூ பண்றது தான் கரெக்டா என்று கேட்கிறார். இதற்கு பாரு கடைசி எல்லாரும் என்னை மட்டும் குத்துங்க. நீ நல்லா இரு அண்ணே என்று கத்திக் கொண்டே செல்கிறார். Diwakar🙃 – Paaru🙃 – Gaana Vinoth 🙃#BiggBossTamil9pic.twitter.com/ADyjzvvzoeதிவாகரை கம்ருதீனும் வினோத்துன் சமாதானப்படுத்துகின்றனர். இதற்கிடையே அவர்கள் மூன்று பேருக்கும் சண்டை ஏற்படுகிறது. அப்போடு கம்ருதீன் திவாகரை பார்த்து துரேகி என்கிறார். திவாகர் வீட்டின் உள்ளே சென்று அனைவரிடமும் சண்டையை பற்றி விளக்குகிறார். இது பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறது. ஒரு கட்டத்தில் கம்ருதீன், திவாகரை அடிக்க பாய்கிறார். அவரை பிக்பாஸ் வீட்டினர் சமாதானப்படுத்துகின்றனர். கனியிடம் வினோத் உங்களுக்காக தான அந்த பொண்ணு எல்லாம் பண்ணுது என்கிறார். இதற்கிடையில் பாரு நீ ஏன் அண்ணா அவர்களிடம் பேசுகிறார் என்று வினோத்திடம் கேட்கிறார்.இதனால் கடுப்பான கனி இதனால் தான் நான் அவங்க பிரச்சனையில தலையிடது இல்ல என்கிறார். அதற்கு வினோத் நான் எதுவும் தப்பா பேசியிருந்த மன்னிச்சிருங்க. அந்த பொண்ணு தேவ இல்லாம பேசுது. இது தேவையே கிடையாது என்று சொல்லிவிட்டு செல்கிறார்” இத்துடன் இந்த வீடியோ முடிகிறது. இதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள் திவாகரை விமர்சித்து வருகின்றனர்.