இலங்கை

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு; 3,553 பேர் கைது!

Published

on

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு; 3,553 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 3,553 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.  இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் 1222 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 1212 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன்  43 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 947 பேரும், கஞ்சா செடிகளுடன் 42 பேரும், போதை மாத்திரைகளுடன் 75 பேரும், சட்டவிரோத சிகரட்டுகளுடன் 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 01 கிலோ 600 கிராம் 104 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 03 கிலோ  585 கிராம் 528 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 06 கிலோ 377 கிராம் 581 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருளும், 11 கிலோ 264 கிராம் 551 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 113010  கஞ்சா செடிகளும், 1468 போதை மாத்திரைகளும், 674 சட்டவிரோத சிகரட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version