வணிகம்

நொறுங்கும் அமெரிக்க கனவு… H-1B விசாவை நிறுத்திய 4 பெரிய கம்பெனிகள்: முழு விவரம் இங்கே!

Published

on

நொறுங்கும் அமெரிக்க கனவு… H-1B விசாவை நிறுத்திய 4 பெரிய கம்பெனிகள்: முழு விவரம் இங்கே!

அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டுத் திறமையாளர்கள் பெரிதும் நம்பியிருந்த H-1B விசா திட்டத்தில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சமீபத்தில் கொண்டுவந்த கொள்கை மாற்றம், இந்திய ஐ.டி. ஊழியர்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக H-1B விசாவுக்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், $100,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 83 லட்சம்) கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதுதான் இதற்குக் காரணம்.இந்த மாபெரும் கட்டண உயர்வால் தற்போது, பல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள், சில குறிப்பிட்ட பதவிகளுக்கான H-1B விசா ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்தியுள்ளன அல்லது குறைத்துவிட்டன.ஏன் இந்த அதிரடி மாற்றங்கள்?அமெரிக்காவில் உள்ள சிறந்த உலகளாவிய திறமையாளர்களைத் தொடர்ந்து ஈர்ப்பதுடன், இத்திட்டத்தை மலிவான வெளிநாட்டு உழைப்பாளர்களை இறக்குமதி செய்யப் பயன்படுத்தி, அமெரிக்க ஊழியர்களின் ஊதியத்தைக் குறைக்கும் சுரண்டலைத் தடுக்கவே இந்தக் கட்டணச் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.சட்ட சவால்களும் நிறுவனங்களின் முடிவும்இந்தக் கொள்கை கடும் விமர்சனங்களையும் சட்ட சவால்களையும் சந்தித்து வருகிறது. அமெரிக்க வர்த்தகச் சபை (US Chamber of Commerce) தாக்கல் செய்துள்ள வழக்கில், இந்த $100,000 கட்டணம் ஸ்டார்ட்-அப் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்குச் “செலவு செய்ய முடியாத அளவுக்கு மிக அதிகமாக இருக்கும்” என்று வாதிட்டுள்ளது. மேலும், இது தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் நாட்டின் போட்டித்திறனைப் பாதிக்கும், புதிய கட்டணத்தை விதிக்க அதிபருக்கு அதிகாரம் உண்டா என்றும் எதிர்ப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.இதற்குப் பதிலடியாக, பல நிறுவனங்கள் H-1B விசாக்களைச் சார்ந்திருக்கும் பதவிகளுக்குப் பணியமர்த்தலை நிறுத்தியுள்ளன:டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS): மிகப்பெரிய H-1B ஸ்பான்சர்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இனி இந்தத் திட்டத்தின் மூலம் பணியமர்த்த மாட்டோம் என்று அறிவித்துள்ளது. அமெரிக்காவில் போதுமான எண்ணிக்கையில் H-1B ஊழியர்கள் ஏற்கனவே உள்ளனர் என்றும், இனி உள்ளூர் திறமையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே. கிருத்திவாசன் தெரிவித்தார். இன்டியூட்டிவ் சர்ஜிக்கல் (Intuitive Surgical): செப்டம்பர் மாத இறுதியில், கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட மருத்துவ-தொழில்நுட்ப நிறுவனமான இன்ட்யூட்டிவ் சர்ஜிக்கல், H-1B விசா ஸ்பான்சர்ஷிப் தேவைப்படும் விண்ணப்பதாரர்களுக்கான வாய்ப்புகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டதாக பிசினஸ் இன்சைடர் (Business Insider) செய்தி வெளியிட்டது. நிறுவனத்தின் இணையதளத்தில் 100-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்புகளில், “அமெரிக்க நிர்வாகத்தின் சமீபத்திய அறிவிப்பால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை காரணமாக, H-1B விசா ஸ்பான்சர்ஷிப் தேவைப்படும் வேட்பாளர்களுக்கு நாங்கள் அளிக்கும் சலுகைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கிறோம்” என்று அறிவிப்புகள் இணைக்கப்பட்டிருந்தன.வால்மார்ட் (Walmart):சுமார் 2,400 H-1B வைத்திருப்பவர்களைப் பணியமர்த்தியுள்ள வால்மார்ட் நிறுவனமும், விசா ஸ்பான்சர்ஷிப் தேவைப்படும் கேண்டிடேட்ஸை (candidates) பணியமர்த்துவதை நிறுத்தியுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.”எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்யச் சிறந்த திறமையாளர்களைப் பணியமர்த்துவதிலும் முதலீடு செய்வதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், அதே நேரத்தில் எங்கள் H-1B பணியமர்த்தல் அணுகுமுறையில் சிந்தனையுடன் செயல்படுகிறோம்” என்று வால்மார்ட் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.காக்னிசென்ட் (Cognizant): இந்தியாவில் நிறுவப்பட்டு, நியூ ஜெர்சியில் தலைமையிடத்தைக் கொண்டுள்ள இந்த ஐ.டி. ஆலோசனை நிறுவனம், புதிய H-1B கொள்கை குறித்து நேரடியாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. இருப்பினும், அக்டோபர் 14 அன்று தெற்கு கரோலினாவில் மென்பொருள் பொறியியல் பதவிக்கான ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பில், “முதலாளியின் ஸ்பான்சன்ஷிப் தேவையில்லாமல் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வேலை செய்ய அங்கீகாரம் பெற்ற விண்ணப்பதாரர்களை மட்டுமே இப்பணிக்குக் கருத்தில் கொள்வோம்” என்று நிறுவனம் குறிப்பிட்டிருந்ததுட்ரம்பின் ‘விசா தடை’ கிளப்பிய நிறுவனங்களின் நடவடிக்கைசெப்டம்பர் 21-ஆம் தேதி முதல் அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வந்த இந்தக் கட்டண உயர்வு, விசாக்களைப் புதுப்பிப்பவர்களுக்கோ அல்லது F-1 மாணவர் விசா போன்ற பிற விசா வகைகளில் இருந்து H-1B விசாவுக்கு மாறுபவர்களுக்கோ பொருந்தாது. இருப்பினும், புதிதாக அமெரிக்காவுக்கு வரும் ஊழியர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று யு.எஸ். குடியுரிமை மற்றும் குடிவரவுச் சேவைகள் (USCIS) தெளிவுபடுத்தியுள்ளது.2026 நிதியாண்டுக்கான H-1B விசாக்களுக்கான அதிகபட்ச வரம்பை (65,000 சாதாரண மற்றும் 20,000 மேம்பட்ட பட்டம்) அடைவதற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே கிடைத்துவிட்டதாகவும் அது (USCIS) தெரிவித்துள்ளது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version